வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 22 நவம்பர் 2014 (19:58 IST)

கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாய்ங்க... லிங்காவை வக்கீல்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டுமாம்

லிங்கா என்னுடைய கதை என்று ஒரேயொரு வழக்குதான் இதுவரை போடப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று ஆச்சரியப்பட்ட நிலையில், அப்படியே விட்டுருவோமா என்பது போல் கிளம்பியிருக்கிறது புதுக்கோஷ்டி.

லிங்காவை வக்கீல்களுக்கு திரையிட்டு காட்டிய பிறகே வெளியிட வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.
 

 

இந்த புது அஸ்திரத்தை எறிந்திருப்பவர் வழக்கறிஞர் நன்மாறன். அவர் தணிக்கைக்குழுவுக்கு அளித்துள்ள புகார் மனுவில், லிங்கா படத்தில் நீதித்துறையையும், வக்கீல்களையும் அவமதிப்பது போல் காட்சிகள், வசனங்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த காட்சிகளுடன் படம் வெளிவந்தால் திரையுலகினருக்கும், வக்கீல்களுக்கும் இடையே தேவையற்ற தகராறுகள் ஏற்படும் (ஆமா, உள்நாட்டு போர் ஏற்பட்டாலும் ஏற்படும்) எனவே சர்ச்சையான காட்சிகள் உள்ளனவா என்று பார்த்த பிறகே லிங்காவை வெளியிட அனுமதிக்க வேண்டும். அதேபோல் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் படத்தைப் பார்க்கவும் அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

நன்மாறனுக்கு நல்மனது. படத்தை வக்கீல்களின் அப்பத்தா, அத்தைமார், மாமிமார் எல்லாம் பார்த்து ஓகே சொன்ன பிறகே வெளியிட வேண்டும் என்று கோரவில்லை. தாராளம்தான்.