Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு செல்லும்போதும் பரணியை பறக்கணித்த கஞ்சா கருப்பு!

Sasikala| Last Modified திங்கள், 10 ஜூலை 2017 (14:00 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் யார் என்ற எதிர்பார்ப்புகளுக்கிடையே, வெளியேற்றப்படும் பட்டியலில் கஞ்சா கருப்பு, ஓவியா, பரணி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

 
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு வெளியேறுவதாக கமல் அறிவித்தார். உடனே எழுந்த கஞ்சா கருப்பு மற்ற போட்டியாளர்களிடம் தான் விடைபெறுவதாக கூறி ஒவ்வொருவராக கட்டி தழுவினார். ஆனால் அங்கேயே நின்றுகொண்டிருந்த பரணியை கண்டுகொள்ளவே இல்லை. கஞ்சா கருப்பு. பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுடன் செல்ஃபி எடுத்துவிட்டு ஓவியாவுடன் குத்தாட்டம் போட்டுவிட்டு கிளம்பினார் கஞ்சா கருப்பு. மேலும் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த  நாட்களில் ஆராரிடம் சமையலும், கணேஷிடம் இருந்து யோகாவும் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
 
இதனை தொடர்ந்து பரணி கண் கலங்கியபடி சோகமாக காணப்பட்டார். ஆரம்பம் முதலே கஞ்சா கருப்பு பரணியை அழ வைத்ததோடு, புறக்கணித்தும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :