Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

லாரன்சின் காயத்துக்கு காரணம் ரித்திகா சிங்...?

Sasikala| Last Modified செவ்வாய், 31 ஜனவரி 2017 (16:24 IST)
கழுத்தில் அடிப்பட்ட லாரன்ஸ், கழுத்தில் கட்டுடன்தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்டார்.  படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து என்று இந்த காயத்தை ஒருவரியில் அனைவரும் கடந்து சென்றனர். ஆனால், இந்த  காயத்துக்குப் காரணம் ரித்திகா சிங் என்கிறது ஒரு கோஷ்டி.

 
லாரன்ஸ் சிவலிங்கா படத்தில் ரித்திகா சிங்குடன் நடித்தார் அல்லவா. அதில் இருவரும் சண்டையிடுவது போல் ஒரு காட்சி  உள்ளது. அதில் ரித்திகா சிங் காலால் லாரன்சின் கழுத்தில் சின்னதாக டச் செய்ய அதில் கழுத்து சுளுக்கிக் கொண்டதாம்.
 
ரித்திகா ஒரு பாக்ஸர். இப்படித்தான் இறுதிச்சுற்று படத்தில் சின்னதாக ஒரு குத்துவிட்டு மாதவனின் தாடையை பெயர்த்தார்.  இப்போது லாரன்ஸ்.
 
என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா...


இதில் மேலும் படிக்கவும் :