Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மக்கள் சூப்பர்ஸ்டார் பட்டம்: லாரன்ஸ் ரியாக்சன் என்ன?


Last Modified வெள்ளி, 10 மார்ச் 2017 (12:49 IST)
தமிழ் சினிமாவின் அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ யார்? என்பதுதான் யாருக்கும் விடைதெரியாத கேள்வியாக இருக்கிறது. விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் என அந்த டைட்டிலுக்கு ஆசைப்படாதவர்கள் கிடையாது. சம்பந்தப்பட்டவர்களே சும்மா இருந்தாலும், கூட இருப்பவர்கள் ஏற்றிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். ராகவா லாரான்ஸும் அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார்.
 
 

அவர் நடித்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. அந்தப் படத்தின் டைட்டில் கார்டில்,  ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ ராகவா லாரன்ஸ் என்று வருகிறதாம். இதையடுத்து சமூக வலைதளங்களில் லாரன்ஸை கடுமையாக விமர்சனம் செய்கின்றனர்.

இந்த பட்டம் குறித்த செய்தி லாரன்ஸிற்க்கு தெரிந்தே நடந்ததா என்றும் பலர் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் மொட்ட சிவா படத்தில் இடம்பெற்ற மக்கள் சூப்பர்ஸ்டார் பட்டம் லாரன்சிற்கு தெரியாமல் படக்குழுவினர் செய்தது என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து இப்படத்தின் இயக்குனர் சாய் ரமணி கூறுகையில்,

லாரன்ஸுக்கு இன்ப அதிர்ச்சி தர வேண்டும் என்று நினைத்து மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அளித்தேன்.  இதனை அறிந்த அவர் என்னைக் கூப்பிட்டுக் கண்டித்தார். மேலும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான். எனக்கு எந்த பட்டமும் வேண்டாம் என்றும் அவர் கூறினார். படத்தில் இடம்பெற்றுள்ள அந்த பெயரை நீக்க காவல் அவகாசம் வேண்டும் என்பதால், மன்னித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ஆனாலும் ஒரு படத்தின் நாயகன் தனது படத்தை வெளியிடும் நாள் முன்புவரை பார்க்காமல் இருப்பாரா என்றும் கேள்விகள் எழுகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :