வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (09:31 IST)

அஜீத்தின் தங்கை லட்சுமி மேனன்...?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்குகிறது. ஸ்ருதி ஹீரோயின், அனிருத் இசை. இந்தப் படத்தில் அஜீத்தின் தங்கையாக நடிக்க நித்யா மேனன், ஸ்ரீதிவ்யா ஆகியோரிடம் கேட்டிருந்தனர்.
 

 
நித்யா மேனன், தங்கையாக நடிக்க முடியாது என்று மறுத்துள்ளார். ஸ்ரீதிவ்யா கால்ஷீட்டை காரணம் காட்டி, சாரி சொன்னதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லட்சுமி மேனனை அஜீத்தின் தங்கையாக நடிக்க வைக்கயிருப்பதாக புதிய தகவல்கள் கூறுகின்றன. 
 
ஆனால், இந்தத் தகவலை இதுவரை யாரும் உறுதி செய்யவில்லை.