வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2017 (11:37 IST)

பிரபுதேவா ஜோடியாக லட்சுமி மேனன் ஒப்பந்தம்

அறிமுக இயக்குனர் எம்எஸ் அர்ஜுன் இயக்கும் குங்ஃபூ படம், சங் மங் சங் திரைப்படத்தில் பிரபுதேவா ஜோடியாக லட்சுமி மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


 

இந்தப் படத்தில் பிரபுதேவாவின் அப்பாவாக தங்கர் பச்சான் நடிக்கிறார். மகனை சீனாவுக்கு அனுப்பி குங்ஃபூ படிக்க வைக்கும் தந்தையாக இதில் அவர் வருகிறார். பிரபுதேவா குங்ஃபூ கற்றாரா இல்லையா என்பது கதை.

இந்த மாத இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்நிலையில், படத்தின் நாயகியாக லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.