வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 18 ஜூன் 2014 (15:01 IST)

மூன்றாவது லடாக் சர்வதேச திரைப்பட விழா

இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாக்கள் நடத்தப்படுவது அதிரிகத்துள்ளது. ஒவ்வொரு திரைப்பட விழாவுக்கும் ஒரு சிறப்பு. டிசம்பர் மாதம் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படும். அது தவிர வருடம் முழுவதும் தொடர்ச்சியாக பல அமைப்புகள் சின்னஞ்சிறிய திரைப்பட விழாக்களை நடத்துகின்றன.
லடாக் சர்வதேச திரைப்பட விழா இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. இது மூன்றாவது வருடம். சில தினங்கள் மட்டுமே நடந்தாலும் இந்த திரைப்பட விழா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. காரணம் லடாக் என்ற இயற்கையின் எழில் பிரதேசம். மலைகள் சூழ்ந்த இயற்கையின் எழில் கொட்டிக் கிடக்கும் இடத்தில் இந்த விழா நடத்தப்படுகிறது.
ஜூன் 27 முதல் 29 வரை நடக்கும் இந்த திரைப்பட விழாவில் தற்கால கொரியன் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. அகிரோ குரோசவாவின் திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளது. கமல் ஸ்வரூப்பின் ரங்க்பூமி திரைப்படம் திரைப்பட விழாவின் தொடக்கப்படமாக திரையிடப்படும். ஸ்பெஷல் கிரீன் கார்ப்பெட் ப்ரிமியரில் அனுராக் காஷ்யபின் அக்ளி திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 
 
இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் பின்னணி இசை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.