வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2015 (14:49 IST)

சுந்தர். சி இல்லாமல் குஷ்பு தயாரிக்கும் படம் - வைபவ் நடிக்கிறார்

குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் இதுவரை சுந்தர். சி இயக்கிய படங்களை மட்டுமே தயாரித்து வந்தது. இனி பிற இயக்குனர்களின் படங்களையும் தயாரிப்பேன் என குஷ்பு கூறியிருந்தார். 2015 -இல் அதில் செயல்வடிவம் பெற்றிருக்கிறது.
 
குஷ்பு அடுத்து தயாரிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்குகிறார். காமெடிப் படமாக உருவாகும் இந்தப் படத்தில் வைபவ் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோயின் மற்றும் பிற விவரங்களை குஷ்பு விரைவில் அறிவிக்கிறார்.