Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சதையை மீறி... கிருத்திகா உதயநிதியின் மியூஸிக் வீடியோ


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 13 பிப்ரவரி 2017 (18:03 IST)
வணக்கம் சென்னை படத்துக்கு பிறகு, சமூதாயத்தில் திருநங்கைகள் சந்தித்து வரும் பிரச்சனைகளை மையமாக கொண்டு, சதையை மீறி என்னும் மியூசிக் வீடியோவை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி.

 
 
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இந்த மியூசிக் வீடியோவை தயாரிப்பதில் லைக்கா புரொடக்ஷன்ஸ் முக்கிய பங்காற்றியிருக்கிறது.
 
இந்த மியூஸிக் வீடியோ குறித்து பேசிய கிருத்திகா, "நம் சமூதாயத்தில் பல ஆண்டு காலமாக வெளிச்சத்திற்கு வராத மிக முக்கியமான பிரச்சனை இது. அவர்கள் நம்மிடம் இருந்து கேட்பது அன்பு ஒன்றை மட்டும் தான். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் புறக்கணிப்பு என்பது மிகப்பெரிய தண்டனையாக இருக்கும். அத்தகைய தண்டனையை அனுபவித்து வரும் அவர்களுக்கு நாம் ஏன் நம்முடைய அன்பை பகிர்ந்து கொள்ள கூடாது? 12 திருநங்கைகளின் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த சதையை மீறி பாடல், நாம் அனைவரும் அவர்களுக்கு உறுதுணையாய் இருக்க உதவும்" என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :