வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (11:07 IST)

தெலுங்கில் தயாராகும் சைவம்

பிறமொழிப் படங்களை தமிழுக்கு ஏற்ப தழுவி எடுத்துவந்த இயக்குனர் விஜய், மாஸ் ஹீரோ இல்லாமல் எடுத்த படம் சைவம். தமிழில் சுமாராகப் போன இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவிருப்பதாக சைவம் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
 
சைவத்தில் நாசர், சிறுமி சாரா, நாசன் மகன் ஆகியோர் நடித்திருந்தனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு, ஜீ.வி.பிரகாஷ் இசை.
 
இந்தப் படத்தை இயக்குனர் க்ரிஷ் தெலுங்கில் ரீமேக் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் வெளியான ரமணா படத்தை கப்பார் என்ற பெயரில் அக்ஷய் குமாரை வைத்து இந்தியில் க்ரிஷ் ரீமேக் செய்து வருகிறார். இதையடுத்து மகேஷ் பாபுவை வைத்து ஷிவம் என்ற படத்தை இயக்குகிறார்.
 
இந்தியில் அக்ஷய் குமார், தெலுங்கில் மகேஷ்பாபு என முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கும் க்ரிஷ் சைவம் படத்தை ரீமேக் செய்வதாக இங்குள்ளவர்கள் தெரிவித்திருப்பது ஆச்சரியமானது.