வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 27 நவம்பர் 2014 (14:34 IST)

கோவை சரளா - கொங்கு தமிழை மறந்த கோட்டையம்மாள்

கொம்பன் படத்தில் ஆளே தெரியாத அளவுக்கு அடக்கமாக மாறியிருக்கிறார் கோவை சரளா. அடக்கம் என்றது அவரது தோற்றத்தில். 
 
கோவை சரளாவும் கொங்கு தமிழும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் மாதிரி. பிரிக்கவே முடியாது. அவரது கொங்கு தமிழுக்காகதான் சதிலீலாவதியில் அவரை நாயகியாக்கினார் கமல். கொம்பன் படத்தில் இந்த உடன்பிறப்புகளை பிரித்திருக்கிறார் இயக்குனர் முத்தையா.
 
கார்த்தி, லட்சுமிமேனன் நடித்துவரும் கொம்பனில் கார்த்தியின் தாய் கோட்டையம்மாளாக கோவை சரளா நடிக்கிறார். வித்தியாசமான, ஒளவையாரின் பழம் நீயப்பா தோற்றத்தில் நடிப்பதுடன் தனது பேச்சு வழக்கையும் கொங்கு தமிழிலிருந்து ராமநாதபுரம் வட்டார வழக்குக்கு மாற்றியிருக்கிறார். கதாபாத்திரத்துக்காகதான் இந்த மாற்றம்.
 
கொம்பன் மேக்கப்பை கலைத்ததும் காமெடி நாயகி மீண்டும் கொங்கு தமிழுக்கு மாறிவிடுவார்... கவலை வேண்டாம்.