வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 13 ஏப்ரல் 2015 (13:11 IST)

சென்னை பாக்ஸ் ஆபிஸை கலக்கும் கொம்பன், நண்பேன்டா

இந்த வாரம் இரண்டு படங்கள் மட்டுமே சென்னை பாக்ஸ் ஆபிஸில் கோலோச்சுகின்றன. நண்பேன்டா, கொம்பன்.
 
சமீபத்தில் வெளியான வேறு எந்தப் படமும் ரசிகர்களை கவரவில்லை. அதனால் இவ்விரு படங்களுக்கும் ஜாக்பாட். கூட்டம் அம்முகிறது.
 

 
நண்பேன்டா சென்ற வார இறுதியில் 40.2 லட்சங்களை வசூலித்துள்ளது. வார நாள்களில் இதன் வசூல் 49 லட்சங்கள். நண்பேன்டாவின் தகுதிக்கு இது ரொம்பவே அதிகம். இதுவரை இதன் சென்னை கலெக்ஷன் மட்டும், 1.96 கோடி.
 
சர்ச்சை காரணமாக கொம்பன் தகுதிக்கு மீறிய வசூலை வேட்டையாடுகிறது. சென்னையில் சென்ற வார இறுதியில் 58.2 லட்சங்களை வசூலித்துள்ளது. வார நாள்களில் 56 லட்சங்கள். இதுவரை சென்னையில் மட்டும் 2.3 கோடிகளை வசூல் செய்துள்ளது.
 
இந்த வாரம் ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 வெளியாவதால் கொம்பன் வசூல் அதிரடியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.