தெலுங்கில் மோதிக் கொள்ளும் விஜய், விஷால், சித்தார்த்

vijay
cauveri manickam| Last Modified திங்கள், 6 நவம்பர் 2017 (17:31 IST)
விஜய், விஷால், சித்தார்த் நடித்துள்ள படங்கள், ஒரே நேரத்தில் தெலுங்கில் ரிலீஸாக இருக்கின்றன.




அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மெர்சல்’. தெலுங்கில் ‘அதிரிந்தி’ என்ற பெயரில் தயாரான இந்தப் படம், சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை. அதன்பிறகும் சரியான தியேட்டர்கள் அமையாததால், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.

விஷால் நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. விறுவிறு திரைக்கதையால் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த இந்தப் படம், ‘டிடெக்டிவ்’ என்ற பெயரில் வருகிற வெள்ளிக்கிழமை தெலுங்கில் ரிலீஸாகிறது.

சித்தார்த், ஆன்ட்ரியா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் ‘அவள்’. தமிழ் ரசிகர்களுக்குப் புதுவிதமான பேய்ப்பட அனுபவத்தைக் கொடுத்த இந்தப் படம், ‘குர்ஹம்’ என்ற பெயரில் தெலுங்கிலும் தயாராகியுள்ளது. இந்தப் படமும் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.


இதில் மேலும் படிக்கவும் :