வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 28 மார்ச் 2015 (10:38 IST)

சந்தானத்தின் சாதனை கால்ஷீட்

சந்தானம் நாள்களை எண்ணி எடுத்துதான் படங்களுக்கு தருகிறார். ஒரு நாளைக்கு இத்தனை லட்சங்கள் என்றுதான் சம்பளமும் பேசப்படுகிறது. ஒரேயொருவருக்கு மட்டும் விதிவிலக்கு. அவர், உதயநிதி.
 

 
தனது படங்களின் வெற்றிக்கு காமெடியும், சந்தானமும், கதாநாயகியும் முக்கியும் என்பதை தெளிவாக புரிந்து வைத்திருப்பவர், இந்த மூன்றுக்காகவும் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்.
 
நண்பேன்டா படத்தில் நயன்தாராதான் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக மற்ற படங்களுக்கு அவர் வாங்குவதைவிட அரை கோடி அதிகம் தந்ததாக தகவல். அதேபோல் சந்தானத்துக்கும். மொத்தம் 45 நாள்கள் நண்பேன்டா படத்துக்கு மட்டும் அவர் கால்ஷீட் தந்திருக்கிறார். 
 
சந்தானம் இப்போதெல்லாம் ஒரு படத்துக்கு பத்து நாள்கள் கால்ஷீட் தந்தாலே அதிகம். அவர் 45 நாள்கள் கால்ஷீட் தந்ததை ஆச்சரியமாக பார்க்கிறது கோடம்பாக்கம்.