வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 5 மே 2015 (08:59 IST)

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் உத்தம வில்லன்

5. கப்பார் இஸ் பேக்
இந்திப் படம் ஒன்று சென்னை பாக்ஸ் ஆபிஸில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரமணாவின் தழுவலான, கப்பார் இஸ் பேக். சென்ற வெள்ளிக்கிழமை வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 12.18 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 

4. ஓ காதல் கண்மணி
மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி அனைவரும் சொல்வது போல் மாபெரும் வெற்றியெல்லாம் கிடையாது என்று சென்னை பாக்ஸ் ஆபிஸ் சொல்கிறது. இதுவொரு சாதாரண ஹிட், அவ்வளவுதான். சென்ற வார இறுதியில் 12.34 லட்சங்களை தனதாக்கிய இப்படம் இதுவரை சென்னையில் வசூலித்திருப்பது 2.56 கோடிகள். 

 
 

3. வை ராஜா வை
உத்தம வில்லன் வெளியாகாததால் அதன் முதல்நாள் வசூலில் கணிசமானது இந்தப் படத்துக்கு கிடைத்தது. அப்படியிருந்தும் முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 39.51 லட்சங்கள் மட்டுமே.

 
 

2. காஞ்சனா 2
இந்த வருடத்தின் உண்மையான வெற்றி, காஞ்சனா 2 படம்தான். சென்ற வார இறுதியில் 54.16 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 5.15 கோடிகளை தனதாக்கியுள்ளது. இது காக்கி சட்டை, அனேகன் வசூல்ளைவிட அதிகம். இந்த வார இறுதியில் என்னை அறிந்தால் வலை முந்தும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

 
 

1. உத்தம வில்லன்
ஒன்றரை நாள் கழித்து வெளியான உத்தம வில்லன் இந்த வாரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சனிக்கிழமை மதியம் வெளியான இப்படம் சனி, ஞாயிறு (ஒன்றரை) தினங்களில் 85.40 லட்சங்களை வசூலித்துள்ளது. நல்ல ஓபனிங். ஆனால் அதனை படம் வார நாள்களில் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதுதான் முக்கியமான கேள்வி.