வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 24 நவம்பர் 2014 (15:00 IST)

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் வன்மம்

5. காடு
சென்ற வாரம் வெளியான காடு முதல் மூன்று தினங்களில் 2.9 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. காட்டு வளத்தை காப்போம் என்ற நல்ல பிரச்சார நோக்கம் இருந்தாலும் பிரசன்டேஷனில் சறுக்கியதால் காடு வசூலில் பின்தங்கியுள்ளது.
 

4. கத்தி
கத்தி இன்னமும் ஓடிக் கொண்டுதான் உள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 5 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல் 7.7 கோடிகள். இந்த வருடத்தின் டாப் வசூல்.
 

3. திருடன் போலீஸ்
தினேஷ் நடிப்பில் எஸ்.பி.பி.சரண் தயாரித்துள்ள படம் சென்ற வார இறுதியில் 16 லட்சங்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை படத்தின் வசூல் 83.6 லட்சங்கள்.
 

2. நாய்கள் ஜாக்கிரதை
முதல் பகுதி நன்றாக இருக்கிறது. இரண்டாவது பகுதியையும் அதேபோல் கொண்டு போயிருந்தால் சிபிக்கு ஒரு சிக்சர் கிடைத்திருக்கும். இப்போது ஓடிதான் ரன் எடுக்க வேண்டும். சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 31.3 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
 

1. வன்மம்
வன்மம் முதலிடத்தைப் பிடித்திருந்தாலும் விஜய் சேதுபதியின் கதை கேட்கும் திறன்மீது வன்மம் கீறில் விழ வைத்துள்ளது. ரசிகர்கள் அவர்மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பே இந்தப் படத்தை முதலிடத்தில் கொண்டு சேர்த்துள்ளது. சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 56 லட்சங்களை வசூலித்துள்ளது.