வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 19 அக்டோபர் 2016 (17:49 IST)

கொடியிலும் தனுஷுக்காக பரிந்து பேசும் சரண்யா பொன்வண்ணன்

கொடி படத்தைதான் அதிகம் நம்பியிருக்கிறார் தனுஷ். இழந்த மார்க்கெட்டை கொடி மீட்டுத் தந்தால்தான் உண்டு.

 
வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் அம்மாவாக சரண்யா நடித்திருந்தார். கொடி படத்திலும் அவர் அதே வேடத்தை மீண்டும் செய்துள்ளார். எஸ், கொடியிலும் தனுஷின் அம்மாவாக நடித்துள்ளார். வழக்கம் போல மகனுக்காக புருஷனிடம் பரிந்து பேசுகிற வேடமாம்.
 
தனுஷ் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் கொடியில் த்ரிஷா அரசியல்வாதியாக நடித்துள்ளார். தீபாவளிக்கு படம் திரைக்கு வருகிறது.