கெட்டவன் சிம்புவுக்குள் இப்படியொரு நல்லவரா...?

Sasikala| Last Updated: புதன், 15 பிப்ரவரி 2017 (18:55 IST)
கெட்டவன் என்ற பெயர் நினைவிருக்கிறதா? சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்ட படம். நந்து என்பவர்தான் இயக்குனர். படம்  பாதியில் நின்றதால் நந்து தமிழ் சினிமாவில் மறக்கப்பட்ட நபரானார்.

 
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நந்துவை பார்த்த சிம்பு அவரை வரவழைத்து சந்தித்துள்ளார். அத்துடன்  மருத்துவமனையில் நந்துவின் மனைவி அனுமதிக்கப்பட்டிருப்பது அறிந்து மொத்த பில்லையும் சிம்புவே செட்டில்  செய்திருக்கிறார்.
 
நந்துவுக்கு இதனால் ரெட்டை மகிழ்ச்சி. ஒன்று பண உதவி கிடைத்தது. இரண்டு நந்துவின் மனைவி அட்மிட் செய்யப்பட்டது  பிரசவத்திற்காக.
 
விரைவில் நந்து இயக்கத்தில் சிம்பு என்று அறிவிப்பு வந்தாலும் வரலாம்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :