Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கீர்த்தி சுரேஷ், சமந்தாவுடன் போட்டிபோடும் அனுஷ்கா

Cauveri Manickam| Last Modified புதன், 19 ஏப்ரல் 2017 (13:07 IST)
கீர்த்தி சுரேஷ், சமந்தா நடிக்கும் படத்தில், அனுஷ்காவையும் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கிறார் நாக் அஸ்வின். இந்தப் படத்தில், 1940 முதல் 1980  வரையிலான சாவித்ரியின் வாழ்க்கையைப் பதிவுசெய்யப் போகிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும்  இந்தப் படம் உருவாக இருக்கிறது. 
 
இந்தப் படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பத்திரிகையாளராக சமந்தா நடிக்கிறார். சமந்தா கேரக்டர் வழியாக, சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறார்களாம். இந்நிலையில், இந்தப் படத்தில் நடிக்க அனுஷ்கா மற்றும் பிரகாஷ்  ராஜ் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர்களும் ஓகே சொல்லிவிட்டால், மே மாதம் இரண்டாவது  வாரத்தில் ஷூட்டிங் கிளம்பிவிடுவார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :