Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கீர்த்தி சுரேஷ் வரைந்த ஓவியத்தைப் பாதுகாத்துவரும் விஜய்

CM| Last Modified வியாழன், 1 பிப்ரவரி 2018 (11:15 IST)
கீர்த்தி சுரேஷ் வரைந்து கொடுத்த ஓவியத்தை, தன்னுடைய வீட்டில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்துள்ளார் விஜய்.
விஜய்யின் பிறந்தநாளின்போது கடந்த வருடம் ஒரு ஓவியத்தைப் பரிசாகக் கொடுத்தார் கீர்த்தி சுரேஷ். இந்த ஓவியம், கீர்த்தி சுரேஷ் கைப்பட வரைந்தது. இந்த  ஓவியத்தின் கீழே, ‘என்றென்றும் வெற்றிநடை தொடரட்டும்… பல கோடி ரசிகைகளில் ஒருத்தி’ என தமிழில் எழுதிக் கொடுத்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.
 
இந்த ஓவியத்தை, தன் வீட்டு வரவேற்பறையில் மாட்டி வைத்துள்ளார் விஜய். சமீபத்தில் தன் மகளின் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக விஜய் வீட்டுக்குச் சென்றார் பார்த்திபன். அப்போது விஜய் மற்றும் ஷோபா சந்திரசேகருடன் போட்டோ எடுத்துக் கொண்டார். அந்த போட்டோவில், அவர்களின்  பின்புறம் கீர்த்தி சுரேஷ் வரைந்த ஓவியம் மாட்டப்பட்டிருந்தது.


இதில் மேலும் படிக்கவும் :