அதனை மனதில் வைத்து இதற்கு தீயாக வேலை பார்க்கிறாராம் அனிருத்!

Sasikala| Last Updated: திங்கள், 13 மார்ச் 2017 (15:37 IST)
சிவா இயக்கத்தில் தல அஜீத் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதாவது 25  நாட்கள் நடக்க உள்ளது. அஜீத் மனைவியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். சர்வதேச மாபியாவிடம் சிக்கும் அக்ஷரா  ஹாஸனை இன்டர்போல் அதிகாரியான அஜீத் காப்பாற்றுகிறாராம்.

 
விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியாகி அஜித்தின் சிக்ஸ் பேக் பார்த்தவர்கள் யாராலும் அதை அவ்வளவு  எளிதில் மறந்திருக்க முடியாது. அஜீத்தின் வேதாளம் படத்திற்கு இசையமைத்த அனிருத் தான் விவேகம் படத்திற்கும் இசை  பொறுப்பை ஏற்றுள்ளார். 
 
வேதாளம் படத்தை விட விவேகம் படத்தில் இசை சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக அனிருத் தீயாக வேலை செய்து  நன்றாக வர விரும்புகிறாராம். அஜீத் சிக்ஸ் பேக் காட்டி நடந்து வரும்போது பின்னணியில் மிரட்டலான இசையை கொடுக்க  நினைத்து வேலை செய்து கொண்டிருக்கிறாராம் அனிருத். இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :