அந்த முத்தத்தை மறக்க முடியுமா? கயல் நாயகன்!!


Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 14 மே 2017 (12:53 IST)
கயல் படத்தில் அறிமுகமான நடிகர் சந்திரன், தற்போது ரூபாய், திட்டம் போட்டு திருடுற கூட்டம், கிரகணம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

 
 
‘கிரகணம்’ படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்திருக்கிறார். இதில் கயல் சந்திரன் பாசிட்டிவ் வேடத்தில் நடித்திருக்கிறார். 
 
இந்த படத்தில் கயல் சந்திரன் ஜோடியாக நந்தினி ராய் நடித்துள்ளார். இவர்களுக்கு காதல் காட்சி இருந்தாலும், முத்தக்காட்சி கிடையாது.
 
ஆனால் இதில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ள சிங்கப்பூர் தீபனுக்கும், கயல் சந்திரனுக்கும் முத்தக்காட்சி உள்ளது.
 
இது பற்றி கயல் சந்திரன் கூறியதாவது, பெரும்பாலும் நாயகன், நாயகி இடையே தான் முத்தக் காட்சிகள் இருக்கும். இந்த படத்தில் என் நிலைமையே வேறு. 
 
நகைச்சுவை நடிகர் சிங்கப்பூர் திலீபனுடன் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறேன். அதுவும், உதட்டு முத்தக்காட்சி. இது என் முதல் முத்த காட்சி. எனவே எனக்கு இது மறக்க முடியாத ஒன்று என்றார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :