1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 25 நவம்பர் 2014 (14:13 IST)

24 கெட்டப்புகளில் கமலை முந்தப் போகும் காவ்யா மாதவன்

திரையுலகில் ஒரே நடிகர் 10 வேடங்களில் நடித்ததுதான் அதிகபட்சமாக இருக்கும். அதனை சாதித்தவர் கமல். அவரை முந்தும் திட்டத்தில் இருக்கிறார் காவ்யா மாதவன்.
 
ஆனால் இந்த சாதனையை அவர் செய்யப் போவது சினிமாவில் அல்ல விளம்பரத்தில்.
 
விரைவில் வெளிவரவிருக்கும் விளம்பரம் ஒன்றில் இருபது வயது முதல் தொண்ணூறு வயதுவரையான 24 கெட்டப்களில் காவ்யா மாதவன் தோன்ற இருக்கிறார். நிலவறா என்ற உணவு கம்பெனியின் விளம்பரங்களில் காவ்யா மாதவன் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். அதிலும் அவர் இளம் பெண் முதல் கிழவிவரையான பல தோற்றங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.