வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 20 டிசம்பர் 2014 (14:12 IST)

இசைத் திருட்டு - ஆட்டையைப் போடுகிறாரா அனிருத்

இசையமைப்பாளர்கள் வேறு படங்களின், ஆல்பங்களின் இசையை திருடிவிட்டார்கள் என்று சொல்லப்படுவது அன்றைய காலந்தொட்டே உள்ளது. ஜீ.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி போன்றவர்களின் வருகைக்குப் பிறகு, இந்த திருட்டு விஷயம் அன்றாட பேச்சாகிவிட்டது. அனிருத் வந்த பிறகு, படங்களின் பாடல்களைவிட திருடப்பட்ட விஷயங்கள்தான் அதிகம் பேசப்படுகிறது.
 
கத்தி படத்தின் பாடல்கள் எந்தெந்த படங்களிலிருந்து, ஆல்பங்களிலிருந்து சுடப்பட்டன என்று வீடியோ ஆதாரத்துடன் செய்திகள் வந்தன. தற்போது வெளியாகியிருக்கும் காக்கிச் சட்டை படத்தின் பாடல்களும் காப்பிதான் என வீடியோ ஆதாரத்துடன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். 
 
கதைகளை காப்பி அடிப்பது, இசையை திருடுவது என்று தமிழ் திரையுலகம் இப்போதெல்லாம் இருண்ட வழிகளில்தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் திருட்டு சி.டி.க்கு எதிராக குரல் கொடுப்பதுதான் வேடிக்கை.