வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 29 ஜூன் 2015 (10:28 IST)

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷுடன் நடிக்கும் கருணாகரன்

கயல் படத்துக்குப் பிறகு பிரபுசாலமன் இயக்கும் படம் விரைவில் தொடங்குகிறது. தனுஷ் இதில் நாயகனாக நடிக்கிறார். 
நான் இதுவரை இயக்கிய படங்களில் இதுவே பெரிய பட்ஜெட் என்று கூறியிருக்கும் பிரபுசாலமன், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படத்தை எடுக்கயிருப்பதாகவும் கூறியுள்ளார். வழக்கம்போல் டி.இமான் இசை.
 
இந்தப் படத்தில் புதிதாக கருணாகரனை ஒப்பந்தம் செய்துள்ளனர். தனுஷுடன் படம் நெடுகவரும் கதாபாத்திரமாம் இவருக்கு. பிரபுசாலமன் மற்றும் தனுஷுடன் கருணாகரன் இணைவது இதுவே முதல்முறை.