1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 15 அக்டோபர் 2014 (13:05 IST)

கதாநாயகனாகும் கருணாகரன் - ராதாமோகன் இயக்குகிறார்

சூது கவ்வும் படத்துக்குப் பிறகு கருணாகரனின் கிராஃப் தாறுமாறாக எகிறியது. லிங்காவில் ரஜினியுடன் நடித்து வருகிறவர் ராதாமோகனின் அடுத்தப் படத்தில் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.
ராதாமோகனின் கடைசிப்படம் கௌரவம் அவரது புகழுக்கு கௌரவம் சேர்ப்பதாக அமையவில்லை. படம் அட்டர் ப்ளாப். அடுத்து கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒரு படத்தை இயக்குகிறார்.
 
இதனை உறுதி செய்த கருணாகரன் படத்தின் பெயர் மற்றும் பிற விவரங்களை கூற மறுத்துவிட்டார். ராதாமோகனின் மொழி, பயணம் படங்களின் ரசிகன் நான். அவரது படத்தில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என தெரிவித்தார்.