வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 27 நவம்பர் 2014 (14:09 IST)

கார்த்தி, நாகார்ஜுன் படத்தில் ஸ்ருதி...?

பிரெஞ்சில் வெளியான இன்டச்சபிள்ஸ் படத்தின் ரீமேக் உரிமையை முறைப்படி வாங்கி தமிழ், தெலுங்கில் படம் எடுக்கப் போவதாக தகவல். படத்தில் நடிப்பவர்கள் கார்த்தி, நாகார்ஜுன். இந்த ரீமேக் விவகாரத்தை படம் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் உறுதிப்படத்தவில்லை. வம்சி (கிருஷ்ணவம்சி அல்ல) இயக்கும் இந்தப் படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் படத்தில் வரும் பிரதான பெண் கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதியை அணுகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் கதையும், கதாபாத்திரமும் ஸ்ருதியை கவர்ந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
 
தமிழ், தெலுங்கு, இந்தி என்று பிஸியாக நடித்துவரும் ஸ்ருதி இந்தப் படத்தில் நடிக்க கால்ஷீட் ஒத்து வருமா என்பது முக்கியமான கேள்வி.