வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2016 (15:03 IST)

கார்த்தி படத்துக்கு இப்படியொரு சோதனையா...?

கார்த்தி படத்துக்கு இப்படியொரு சோதனையா...?

கார்த்தி நடித்திருக்கும் காஷ்மோரா தீபாவளியை முன்னிட்டு வரும் 28 -ஆம் தேதி வெளியாகிறது.

 
கார்த்தி இதுவரை நடித்தப் படங்களில் இந்தப் படமே அதிகப் பொருட்செலவில் தயாரான படம் என கூறப்படுகிறது. கார்த்திக்கு படத்தில் 3 கெட்டப்புகள். நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் என்று நட்சத்திரப் பட்டாளமும் இருக்கிறது.
 
இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள் யு/ஏ சான்றிதழ் தந்துள்ளனர். யு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே 30 சதவிகித வரிச்சலுகை எனும் நிலையில், காஷ்மோரா வசூலில் முப்பது சதவீதத்தை அரசுக்கு செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.