வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : சனி, 25 அக்டோபர் 2014 (15:11 IST)

கார்த்தி, நாகார்ஜுன் நடிக்கும் படம் பிரெஞ்ச் திரைப்படத்தின் ரீமேக்...?

கார்த்தி, நாகார்ஜுன் நடிப்பில் பிவிபி சினிமாஸ் தமிழ், தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்கிறது. இதனை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருந்தது. சமீபத்திய செய்தி, பிரெஞ்சில் வெளியான த இன்டச்சபிள்ஸ் (Intouchables)  படத்தின் உரிமையை வாங்கி தமிழ், தெலுங்கில் இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள்.
 
வெளிநாட்டுப் படங்களை தழுவி படம் எடுப்பது தமிழ், தெலுங்கு திரையுலகில் அதிகரித்து வருகிறது. ஆனால் பிவிபி சினிமா இன்டச்சபிள்ஸ் படத்தின் ரீமேக் உரிமையை முறைப்படி வாங்கி தயாரிக்கிறார்கள்.

இந்தப் படம் 2011 செப்டம்பரில் திரைக்கு வந்தது. அதே வருடம் டிசம்பரில் இதே கதையமைப்புடன் மலையாளத்தில் பியூட்டிஃபுல் என்ற திரைப்படம் வெளியானது. கழுத்துக்கு கீழ செயல் இழந்த நிலையில் எப்போதும் படுக்கையில் இருப்பவர் ஜெய்சூர்யா. பணக்காரர். அவருக்கும் இசைக்கலைஞரான அனுnப் மேனனுக்கும் ஏற்படும் நட்பே படத்தின் பிரதான அம்சம். 
 
பியூட்டிஃபுல் படம் வெளியான போது இன்டச்சபிள்ஸ் படத்தை அனுnப் மேனன் காப்பி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் செப்டம்பரில் பிரெஞ்ச் படம் வெளியாகும் போது பியூட்டிஃபுல் படம் அண்டர் புரொடக்ஷனில் இருந்தது. நிஜ சம்பவங்களை வைத்தே இந்தப் படத்தை எடுத்ததாக அனுnப் மேனன் கூறினார்.
 
பிரெஞ்ச் படமான இன்டச்சபிள்ஸும் 2004 -இல் வெளியான டாகுமெண்ட்ரியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதே. அதுவும் உண்மைச்சம்பவம்தான்.
 
இரு படங்களின் அடிநாதமாக இருப்பது நட்பும், நகைச்சுவையும். நல்ல திரைப்படங்களை முறைப்படி அனுமதி வாங்கி ரீமேக் செய்யும் நேர்மையான போக்குக்கு இந்தப் படம் முன்னுதாரணமாக அமையட்டும்.