வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (15:47 IST)

அஞ்சானில் ஆடப்போகும் கரீனா கபூர்

பாடல் காட்சிகளுக்கு இந்திய இயக்குனர்கள் செலவ‌ளிக்கும் பணமும், செலுத்துகிற உழைப்பும் பிரமிப்பைத்தாண்டி அச்சப்படுத்தக் கூடியது. ஒரு பாடல் காட்சிக்கு செலவளிக்கும் பணத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற நல்ல படங்கள் இரண்டு எடுக்கலாம். 
அஞ்சான் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து வருகிறது. ஏற்கனவே சித்ரங்கதா சிங் ஒரு பாடலுக்கு ஆடினார். இப்போது கரீனா கபூரையும் ஒரு பாடலுக்கு ஆட வைக்க இருக்கிறார்களாம்.
 
அஞ்சான் படப்பிடிப்பு ஆரம்பமான போதே ஒரு பாடலுக்காக கரீனாவை அணுகினர். முதலில் ஒரு பாடலுக்கு ஆட மறுத்தவர் தற்போது திடீரென்று ஆட சம்மதித்துள்ளார்.
 
முன்னணி நடிகைகள் இதுபோல் ஒரு பாடலுக்கு ஆடும்போது பெரும் தொகை சம்பளமாக தரப்படும். கரீனா இந்தியின் முன்னணி நடிகை. ஒரு கோடிக்கு குறையாமல் தந்திருப்பார்கள்.