வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2015 (14:52 IST)

கபாலிக்கு பிரமாண்ட அரங்குகள்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் சென்னை படப்பிடிப்புக்காக இரண்டு பிரமாண்ட அரங்குகள் தயாராகி வருகின்றன.


 
 
நிஜமான தெருக்களில் படப்பிடிப்பை நடத்தவே விரும்புவார் ரஞ்சித். அவரது இரு படங்களும் அப்படித்தான் எடுக்கப்பட்டன
 
ரஜினியை அப்படி ஊருக்குள் நடிக்க வைக்க முடியாது. ரசிகர்கள் கூடிவிடுவார்கள். அதனால் பிரமாண்ட அரங்குகள் அமைத்து வருகின்றனர்.
 
ஒரு அரங்கு பூந்தமல்லி ஈவிபி ஸ்டுடியோவிலும், இன்னொரு அரங்கு இசிஆர் பனையூரில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவிலும் தயாராகி வருகின்றன.
 
இங்குதான் கமலின் தூங்கா வனம் படத்தின் அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன என்பது முக்கியமானது.