வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 4 மே 2015 (11:41 IST)

உத்தம வில்லன் 15 நிமிடக் காட்சிகள் குறைப்பு

2 மணி 53 நிமிடங்கள் ஓடக் கூடிய உத்தம வில்லனை முழுமையாகப் பார்த்த அனைவரும் சொன்ன விஷயம், படத்தில் வரும் உத்தமன் பகுதியில் கணிசமாக கத்திரி போடலாம். உத்தம வில்லன் என்ற அறுசுவையில் கொஞ்சம் அறுவையாக இருந்த பகுதி அது. 
 

 
தற்போது திரையில் ஓடிக் கொண்டிருக்கும் உத்தம வில்லன் 15 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட படம். உத்தமன் காட்சிகளில் 15 நிமிடங்களை கத்தரித்திருக்கிறார்கள்.
 
சரி, படத்தின் ரிசல்ட் எப்படி?
 
ஏ சென்டர்களில் பரவாயில்லை. பி, சி... ஏமாற்றம்தான்.