1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2015 (09:58 IST)

உத்தம வில்லன் முன்பதிவு - ஏமாறாதீங்க ரசிகர்களே

லிங்கா படம் வெளிவருவதற்கு முன்பும் இப்படித்தான் சொன்னார்கள். முன்பதிவு ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன என்று. அதேபோல்தான் உத்தம வில்லனுக்கும் பிரச்சாரம் செய்கின்றன மீடியாக்கள்.
 
ஆனால், உண்மை நிலவரம் என்ன?
 
நாளை உத்தம வில்லன் வெளியாகிறது. முதல் நாளுக்கான டிக்கெட் அனேகமாக எல்லா திரையரங்குகளிலும் சில மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டது. ஆனால் சனி, ஞாயிறு காட்சிகளுக்கு தாராளமாக டிக்கெட் கிடைக்கிறது. ஒருசில திரையரங்குகளில் மட்டுமே சனி, ஞாயிறு காட்சிகளுக்கு டிக்கெட் இல்லை. 90 சதவீத திரையரங்குகள் இன்னும் காலியாகத்தான் உள்ளன.
 
இதனை மறைத்து, ஒரு மணி நேரத்தில் மூன்று நாள்களுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன, நான்கு நாள்களுக்கு ஹவுஸ்ஃபுல் என்று மீடியாக்கள் யாரை ஏமாற்ற நினைக்கின்றன?
 
சந்தேகம் இருப்பவர்கள் டிக்கெட்நியூ இணையத்தில் சென்று பார்த்துக் கொள்ளவும்.