கமல்ஹாசன் வாகனம் சோதனை...தொண்டர்கள் அதிர்ச்சி.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் இன்று பாஜக தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமாரின் சமக ஐஜேகேயுடன் கூட்டணி அனைத்து மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்தது.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் நடிகர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதால் அங்கு தங்கியிருந்து மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
தமிழகத்தி வாக்காளர்களுகு பரிசுபொருட்கள் விநியோகம் செய்வதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாகனத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றிக் கொண்டுசென்றால் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்ற வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் பர்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.