வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 5 மார்ச் 2015 (09:50 IST)

கமல் அறிவுரை - கதை எழுதும் ஸ்ருதி

ஸ்ருதியின் திரைவாழ்க்கை தோல்வியில் ஆரம்பித்தாலும் இப்போது தெலுங்கில் அவர்தான் நம்பர் ஒன் நடிகை. விரைவில் மகேஷ் பாபுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இசையார்வத்துடன் சினிமாவுக்கு வந்த ஸ்ருதி இப்போது இசையை தள்ளி வைத்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். புதிதாக கதை எழுதுவதில் அவரது ஆர்வம் திரும்பியுள்ளது.
 
முதலில் இசையில் விருப்பம் இருந்தது. இப்போது நடிப்பை நேசிக்கிறேன். அடுத்து சினிமாவுக்கு கதைகள் எழுதும்படி எனது தந்தை கமல் ஆலோசனை கூறினார். அதை ஏற்றுக்கொண்டு கதை எழுத ஆரம்பித்து உள்ளேன் என தான் கதை எழுதுவதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
 
அப்படியே இயக்குனராகவும் ஆகிவிடுங்கள். வட்டம் பூர்த்தியாகட்டும்.