1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 4 மார்ச் 2015 (12:22 IST)

முழுநீள இந்திப் படத்தில் நடிக்கும் கமல்...?

கமல் நடிப்பில் உத்தம வில்லன், பாபநாசம் ஆகிய படங்கள் தயாராக உள்ளன. அதில் உத்தம வில்லன் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. விஸ்வரூபம் 2 படத்தின் சில காட்சிகளை எடுத்தால் அப்படமும் நிறைவடைந்துவிடும்.
 
உத்தம வில்லன் வெளியானதும் கமல் தமிழில் ஒரு த்ரில்லர் படத்தை இயக்கி நடிக்கயிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்காக மொரிஷியஸில் படப்பிடிப்புக்கான இடங்களை சமீபத்தில் சென்று தேர்வு செய்தார்.
 
மேலும், இந்தியில் ஒரு முழுநீளப் படத்தில் கமல் நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை வீரேந்தர் அரோரா மற்றும் அர்ஜுன் கபூர் தயாரிப்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது.