கமல் வெளீயிட்ட 'பிக்பாஸ்' வீடியோ


sivalingam| Last Modified செவ்வாய், 16 மே 2017 (04:24 IST)
வட இந்தியாவில் சக்கை போடு போட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக்பாஸ். விரைவில் விஜய் டிவியில் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்ததே.


 


இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், கிரிக்கெட் விளையாட்டு வீர்ர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ள நிலையில் இதற்கான படப்பிடிப்பும் தொடங்கிவிட்டன. பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செட்டில் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பிக்பாஸ் குறித்த 10 வினாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் இதுகுறித்து, 'எனையாளும் அன்பர்களை சென்றடைய இதுவும் ஓர் வழி.https://twitter.com/vijaytelevision/status/864159183175921664 … விரைவில் உங்கள் அன்பிற்குப் பாத்திரமாக. பாத்திரம் ஏற்காமல் .நானாக நான்' என்று பதிவு செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி கமல் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :