Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பகிரங்கமாக மன்னிப்பு கேட்க தயார்: கமல்!!


Sugapriya Prakash| Last Updated: சனி, 15 ஜூலை 2017 (15:29 IST)
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மலையாள நடிகையின் பெயரை கூறியதற்கு மன்னிப்பு கேட்க தயார் என்று கமல் தெரிவித்துள்ளார்.

 
 
நடிகா் கமல்ஹாசன் தன்னுடைய வீட்டில் நடத்திய பத்திரிகையாளா் சந்திப்பில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மலையாள நடிகையின் பெயரை குறிப்பிட்டார். 
 
இது சர்ச்சையை உருவாக்கியது. இதுகுறித்து கமல் தனது டுவிட்டா் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அவரது பெயரை குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகின்றனர். 
 
காரணம் இன்றி யாருக்காகவும், எதற்காகவும் நான் வளைந்து கொடுப்பது கிடையாது. பெண்களை நேசிப்பவன் நான். அவர்களது உரிமைக்காக போராடுபவனும் கூட. இந்த விஷயத்தில் தேவைப்பட்டால் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :