வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2015 (12:37 IST)

மலையாளப் படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்...?

தூங்கா வனம் முடிந்த நிலையில் விரைவில் மௌலியின் கதை, திரைக்கதையில் காமெடி படம் ஒன்றில் கமல் நடிக்க உள்ளார்.

கமல் இதனை உறுதி செய்யவில்லை எனினும், இதுதான் கமலின் அடுத்தப் படமாக இருக்கும் என தகவல் உலவுகிறது. தூங்கா வனத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வாவே இந்தப் படத்தையும் இயக்க உள்ளார்.


 

 
அதற்குமுன் பிரபல மலையாளப்பட இயக்குனர் டிகே ராஜீவ் குமாரின் இயக்கத்தில் மலையாளப் படம் ஒன்றில் கமல் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
கமல் நாயகனாக மலையாளத்தில் நடித்த கடைசிப்படம், சாணக்கியன். 1989 -இல் வெளியான இந்தப் படத்தை இயக்கிதான் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் டிகே ராஜீவ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.