வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: புதன், 25 ஜூன் 2014 (11:15 IST)

தமிழில் மனம் - குரல் தருகிறார் கமல்?

தெலுங்கில் வெளியான மனம் சூப்பர்ஹிட்டானது. நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜுன், நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யா என மூன்று தலைமுறைகள் இணைந்து நடித்த இந்தப் படத்தை விக்ரம் கே.குமார் இயக்கியிருந்தார். படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.
இந்த மொழிமாற்றத்தில் நாகேஸ்வரராவுக்கு கமல்ஹாசன் டப்பிங் பேசினால் சிறப்பாக இருக்கும் என நாகார்ஜுனும் மற்றவர்களும் விரும்புகிறார்கள். கமல் எப்போதும் நாகேஸ்வரராவின் தீவிர ரசிகர். மனம் படத்தைப் பார்த்து மனம்விட்டு பாராட்டியிருந்தார். நாகேஸ்வரராவை சினிமாவில் பார்த்து மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். 
 
அதனால் மனம் படத்தின் தமிழ் டப்பிங்கில் நாகேஸ்வரராவுக்ககு அவர் குரல் தருவார் என நம்புகிறார்கள். அதேபோல் நாகார்ஜுனுக்கு மாதவன் டப்பிங் பேசினால் நன்றாக இருக்கும் என்ற அபிப்ராயமும் முன் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த விருப்பங்கள் நடைமுறைக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
மனம் வெளிவரும் முன்பே புற்றுநோயால் நாகேஸ்வரராவ் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.