வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 15 டிசம்பர் 2014 (09:42 IST)

கமலின் புதிய படம், வாமமார்க்கம்

கமல் நடிப்பில் தயாராகியிருக்கும் உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2 ஆகியவை ரிலீஸுக்கு தயாராக உள்ளன. சாதகமான சூழல் எதிர்பார்த்து தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். 
 
இந்நிலையில் அடுத்தப் படத்துக்கு அவர் தயாராகிவிட்டார். பிரபலங்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவரும் கமல், தனது மகள் ஸ்ருதி கேட்ட கேள்விக்கு தனது அடுத்தப் படம் குறித்த தகவலை பதிலாக அளித்துள்ளார். 
 
அந்த பதில் வருமாறு...
 
என்னுடைய அடுத்தப் படம் குறித்து ஏற்கனவே முடிவெடுத்துவிட்டேன். அதற்கு வாமமார்க்கம் என்று பெயரிட்டுள்ளேன். வாமமார்க்கம் என்றால் எனக்குத் தெரிந்தவரை, இடதுகை பாதை என்று பொருள். ஆனால், சிலர் அகோரிகளை வாமமார்ஜிகள் என்று கூறுகின்றனர். அது மதம் சம்பந்தப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியினரை நம்நாட்டில் இடதுசாரிகள் என்று அழைக்கிறோம். ஒவ்வொருவருக்கும் இதுகுறித்து பல்வேறு கருத்துகள் உள்ளதால், இதை படமாக்கலாம் என்று நினைத்துள்ளேன்.
 
மருதநாயகம், மர்மயோகி, விருமாண்டி மற்றும் விஸ்வரூபம் கதையின் கரு எனக்கு எவ்வாறு மனதில் தோன்றியதோ, அதுபோலதான் இந்த வாமமார்க்கத்தின் கதையும் தோன்றியது. இந்தப் படம் உருவாக குறைந்தது 7 ஆண்டுகள் தேவைப்படும் என்று கமல் அந்த பதிலில் கூறியுள்ளார்.