Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மகளுக்கு மொட்டை அடித்த கமல்

Sasikala| Last Modified வெள்ளி, 10 மார்ச் 2017 (14:25 IST)
தன் மகளுக்கு கமலே மொட்டை அடித்ததாக வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
 
கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன். உதவி இயக்குநரான இவர், படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது அஜீத்தின்  ‘விவேகம்’ படத்தில் நடித்துள்ள அக்‌ஷரா, அடுத்ததாக பாலிவுட் படமொன்றில் நடிக்கிறார். அந்தப் படத்துக்காக,  மொட்டையடித்துக் கொள்ளப் போகிறாராம் அக்‌ஷரா. 
 
இது எனக்குப் புதிதல்ல என்று தெரிவித்திருக்கும் அக்‌ஷரா, தன்னுடைய ஏழாவது வயதில் தந்தையான கமல்ஹாசனே தனக்கு  மொட்டையடித்ததாகவும் தெரிவித்துள்ளார். அப்போது மொட்டை அடித்துகொள்ள விரும்பிய அக்‌ஷரா, அதை கமலிடம் சொல்ல,  உடனே பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று மொட்டை அடித்திருக்கிறார் கமல். அதை சந்தோஷமான தருணம் என்று குறிப்பிட்டுள்ள அக்‌ஷரா, மீண்டும் அந்த தருணத்தை அனுபவிக்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :