வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 16 டிசம்பர் 2020 (15:31 IST)

பிரபல கட்சியுடன் கமல்ஹாசன் கூட்டணி ? தொகுதிக்காக டீல் பேசியதாக தகவல்

அடுத்தவருடம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைக்கப் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதற்கான பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.

அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே நிச்சயம் தனது கட்சி வெல்லும் என எதிர்ப்பார்ப்புடன் கமல் உள்ளார்.

நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

வரும் தேர்தலில் மக்கள் நலனுக்கான நான் ரஜினியுடன் இணைந்து செயல்படத் தயார்.  எம்.ஜி.ஆர் திமுகவின் திலகமும் இல்லை; அதிமுகவிம் திலமும் இல்லை; அவர் மக்கள் திலகம்.

எங்கள் கட்சியின் பரப்புரைக்கு மறுப்பு தெரிவிக்கப்படும்பொருட்டு விஸ்வரூபம் இருக்கும்…. எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கமல்ஹாசன், ரஜினியுடன் கூட்டணி குறித்து இப்போது பேசவேண்டியதில்லை என்று கூறி, நான் தான் எம்.ஜி.ஆரின் நேரடி வாரிசு என்று கூறி அதிமுகவினரின் விமர்சமத்திற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், ரஜினியுடன் கூட்டணி என்று கூறிய கமல்ஹாசன் சமீபத்தில் திமுகவுடன் கூட்டணி தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுடன் பேசியதாகத் தெரிகிறது. இதில், 40 தொகுதிகள் வரை தனக்கு வேண்டுமென கமல்ஹாசன் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இந்தச் செய்தி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.