1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Updated : புதன், 25 நவம்பர் 2015 (11:55 IST)

கமல், அமலாவின் அம்மா அப்பா விளையாட்டு

கமலின் அடுத்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது. தெலுங்குப் பதிப்புக்கு அம்மா நானா ஆட்டா என்று பெயர் வைத்துள்ளனர். இதற்கு அம்மா அப்பா விளையாட்டு என்று பொருள்.


 

 
 
இந்தப் படத்தை, கமலை வைத்து மலையாளத்தில் சாணக்கியன் படத்தை இயக்கிய டி.கே.ராஜீவ் குமார் இயக்குகிறார். கமலுடன் அமலா, இந்தி நடிகை ஜரீனா ஆகியோர் நடிக்கின்றனர். நகைச்சுவை படமாக இது தயாராகிறது. படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தும் அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளது.
 
வரும் ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்க கமல் திட்டமிட்டுள்ளார். அவரது ராஜ்கமல் இன்டர்நேஷனல்ஸ் படத்தை தயாரிக்கிறது.