Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இவங்க அக்கப்போருக்கு அளவேயில்லையா...?


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 27 டிசம்பர் 2016 (18:51 IST)
அஜித், கமல் ரசிகர்களின் மோதல்தான் இணையத்தில் லேட்டஸ்ட். 

 

 
அஜித், விஜய் மோதல் என்றால் அதில் நியாயமிருக்கிறது. அஜித் - கமல் என்பது செட்டாகவேயில்லையே.... ஆச்சரியத்துடன்தான் நாமும் உள்ளே புகுந்தோம்.
 
அஜித்தின் புதிய படத்தில் அவர் பைக் வீலிங் செய்யும் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது அல்லவா. அதை வைத்து. இந்திய சினிமாவில் இப்படி வீலிங் செய்ய அஜித்தால் மட்டுமே முடியும் என்று அஜித் ரசிகர்கள் மார்தட்டினர். 
 
இதையெல்லாம் எங்க தலைவர் சத்யா படத்திலேயே செய்திட்டார் என்று சத்யா படத்தில் கமல் பைக் வீலிங் செய்யும் வீடியோவை எடுத்துப் போட்டு கமல் ரசிகர்கள் அஜித் ரசிகர்களின் மார்பில் குத்துவிட்டுள்ளனர். 
 
இப்போது உங்க தலை பெருசா எங்க தலை பெருசா என்று இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் குடுமிப்பிடி சண்டையில் இறங்கியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :