Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கமலின் டி.வி. ஷூட்டிங் இங்கதான் நடக்கப் போகுது…

வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (13:06 IST)

Widgets Magazine

விஜய் டி.வி.யில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி உறுதியாகிவிட்டது. இதன் ஷூட்டிங்கிற்காக, ஆடம்பரமான பங்களா  ஒன்றைத் தேர்வு செய்துள்ளனர்.

 
 
வட இந்தியாவில் பிரபலமான டி.வி. நிகழ்ச்சி, ‘பிக் பாஸ்’. அமிதாப் பச்சன், சஞ்சய் தத் போன்ற பாலிவுட் ஸ்டார்கள்  தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை, தற்போது சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். 
 
இந்த நிகழ்ச்சியை தமிழில் நடத்த விஜய் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது. கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து  வழங்கப் போகிறார். இந்த நிகழ்ச்சியைத் தமிழில் பண்ணலாம் என முடிவு செய்தபோது, தயாரிப்பாளர் மனதில் முதலில் வந்தவர் கமல் தானாம். அவரும் ஓகே சொல்ல, இதோ ஷூட்டிங் போகப் போகிறார்கள். 
 
ஆனால், ஷூட்டிங் இங்கல்ல. மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள லோனவ்லா என்ற இடத்தில். மும்பையில் இருந்து சுமார் 96 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த இடம், மலைப்பாங்கான பிரதேசம். இங்குள்ள ஆடம்பர பங்களா ஒன்றில்தான் ஷூட்டிங் நடக்கப் போகிறது என்கிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்தாலும் தமிழன் என்பதை நிரூபித்த நடிகர் சத்யராஜ் - வீடியோ!

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், சத்யராஜ், ராணா, நாசர் நடிகைகள் அனுஷ்கா, ...

news

மூன்றாவது லட்டு தின்னும் விக்ரம்

விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தில், மொத்தம் 3 ஹீரோயின்கள் நடிப்பதாகத் தகவல் ...

news

நயன்தாராவுடன் நடிப்பது உண்மையா? - சரவணா அதிபர் எடுத்த முடிவு

கடந்த சில நாட்களாக இணையதளங்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு செய்தி சரவணா ஸ்டோர் ...

news

மலையாளப் படத்தில் நடிக்கும் ஆர்யா

இதுவரை மூன்று மலையாளப் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்த ஆர்யா, முதன்முறையாக ஹீரோவாக ...

Widgets Magazine Widgets Magazine