வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2015 (15:23 IST)

மீண்டும் இணையும் களவாணி கூட்டணி

சின்ன பட்ஜெட், எளிமையான கதை, யதார்த்தமான காட்சிகள் என்று சொல்லி அடித்த படம், களவாணி. சற்குணம் இயக்க விமல் நடித்திருந்த இந்தப் படம் சின்ன பட்ஜெட் படங்களை எப்படி எடுத்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு பெரிய உதாரணம்.
 
களவாணிக்குப் பிறகு வாகை சூட வா, நய்யாண்டி படங்களை இயக்கிய சற்குணம் தற்போது பாலா தயாரிப்பில் அதர்வாவை வைத்து சண்டி வீரன் படத்தை இயக்கியுள்ளார். படம் முடிந்த நிலையில் அடுத்தப் படத்துக்கான கம்போஸிங் பணிகளை அவர் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்தப் புதிய படத்தில் நடிக்கயிருப்பவர், விமல். அதாவது மீண்டும் களவாணி கூட்டணி ஒன்றிணைகிறது. ஹீரோயின் மற்றும் படத்தின் பெயரை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.