1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2015 (11:12 IST)

காக்கா முட்டைக்கு மேலும் மூன்று விருதுகள்

மணிகண்டன் இயக்கத்தில் உருவான படம், காக்கா முட்டை. வெற்றிமாறனும், தனுஷும் இணைந்து காக்கா முட்டையை தயாரித்தனர். விருதுக்கென்றே தயாரிக்கப்பட்ட படம் இது.
 

 
கடந்த 2014 -ஆம் ஆண்டு காக்கா முட்டை டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சமீபத்தில் இரண்டு தேசிய விருதுகளையும் இப்படம் வென்றது.
 
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் இப்படம் 3 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த திரைப்படம், பார்வையாளர்கள் தேர்வு செய்த சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர்களுக்கான ஜுரி விருது என மூன்று விருதுகளை வென்றதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.
 
காக்கா முட்டையின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.