அஜீத்துக்காக பழக்கத்தை மாற்றிய காஜல்!!


Sugapriya Prakash| Last Modified சனி, 24 டிசம்பர் 2016 (16:29 IST)
நடிகை காஜல் அகர்வால் தற்போது அஜீத்துடன், பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். படத்தை சிவா இயக்கி வருகிறார். 

 
 
அனுஷ்காவின் கால்சீட் குறித்த நேரத்தில் கிடைக்காததால் இப்படத்தின் வாய்ப்பினை பெற்றார் காஜல் அகர்வால்.
 
பெரும்பாலும், நடிகை காஜல் அகர்வால் படப்பிடிப்பு தளங்களில் கேரவனுக்குள் சென்றால் வெளியே வர வெகு நேரமாகும். ஷாட் ரெடி பண்ணிவிட்டு உதவி இயக்குனர்கள் அழைத்தாலும் காஜல் வர நேரமாகும்.
 
ஆனால், அஜீத் படத்தில் அப்படி இல்லையாம். பல்கேரியாவில் சில நாட்களில் பலத்த குளிர் அடித்த போதும் கூட, முதல் ஆளாக கேமரா முன்பு வந்து நின்று நடித்து கொடுத்தாராம் காஜல் அகர்வால். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :