வாய்ப்பில்லாமல் தவிக்கும் காஜல் அகர்வால் – அதிரடி முடிவு !

Last Modified செவ்வாய், 21 மே 2019 (15:43 IST)
கையில் அதிகமாக சினிமா வாய்ப்புகள் இல்லாத காஜல் அகர்வால் புதிதாக கவர்ச்சி போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை டிவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

30 வயதைக் கடந்த காஜல் அகர்வால் தனது சகநடிகைகளான நயன்தாரா மற்றும் திரிஷாவைப் போல் கையில் அதிகப் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகின்றனர். அதனால் வாய்ப்புகளைக் கவர புதிதாக யுக்தியைக் கையாள ஆரம்பித்துள்ளார்.

கவர்ச்சியாக தன்னை போட்டோஷூட் செய்து அதை சமூகவலைதளங்களில் பதிவேற்றி ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளார். மிகவும் இளமையான தோற்றத்தில் கவர்ச்சியாக உள்ள அந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. காஜல் அகர்வால் கையில் இப்போது பாரிஸ் பாரிஸ் மற்றும் கோமாளி ஆகியப் படங்கள் உள்ளன. அவர் ஒப்பந்தமான இந்தியன் 2 படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :